எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொதுஜன பெரமுனவின் வேட்பாளர் ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தப்படுவாரென நாடாளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
பூஜாப்பிட்டிய பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே ரொசான் ரணசிங்க இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“தற்போதும் நாட்டில் காணப்படுகின்ற கட்சியிலேயே பொதுஜன பெரமுன கட்சியே சிறந்த கட்சியாகும்.
அந்தவகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும் ஒன்றாக இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால், பொதுஜன பெரமுனவைச் சேர்ந்தவரே வேட்பாளராக நிறுத்தப்படுவார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைவதற்கு விரும்பும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினர்கள் எந்நேரமும் இங்கு வரலாம்.
அத்துடன் இரு கட்சிகளும் ஒன்றாக பயணிக்க வேண்டுமென்ற எண்ணம் இருப்பின், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த அமரவீரவிடம் ஒன்றைக் கூற விரும்புகின்றோம்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 5 வருடங்களில் ஓய்வுப் பெற்றுச்செல்லும் எண்ணத்திலேயே ஜனாதிபதியானார் என்பதை நினைவுப்படுத்துகின்றோம்” என ரொசான் ரணசிங்க தெரிவித்துள்ளார்.