இனம், மதம் என்ற அடிப்படையில் நாம் ஒருபோதும் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவில்லையென நிதியமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
அத்துடன், பிரபல்யத்துக்காக மக்களுக்கு சேவையாற்றும் அரசியல்வாதி தானல்ல எனவும் அவர் குறிப்பிட்டார்.
மாத்தறை பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே மங்கள சமரவீர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறியுள்ளதாவது, “நான் பிரபல்யத்துக்காக மக்களுக்கு சேவையாற்றும் ஒரு மனிதர் இல்லை. ஆனால் சில விகாரைகளில், அபிவிருத்தி செயற்பாடுகளை மேற்கொள்ளும்போது பயன்படுத்தப்படும் பதாதைகளில் என்னுடைய ஒளிப்படங்களை பதிவேற்ற வேண்டாம் என கூறுகின்றார்கள்.
உண்மையாக என்னுடைய ஒளிப்படம் வெளியாக வேண்டும் என்பதற்காக சேவையாற்றும் விருப்பம் எனக்கில்லை.
மேலும் அரசாங்கம் ஒரு தீர்மானத்தின் கீழ் ஒருமித்து செயற்படும் போது, அதை இடத்திற்கு இடம் மாற்றமுடியாது. அத்துடன் எங்கள் அரசாங்கத்திடம் பணம் நன்றாக இருந்தால் எனது படமும் நன்றாகதான் இருக்கும்.
ஆனால் பெரும்பாலானோர் தங்களுடைய பெயரும் படமும் இடம்பெற வேண்டுமென்பதற்காகவே சேவை செய்கின்றனர்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலைக்கு நானும் பௌசியும் இணைந்தே அடிக்கல் நாட்டி செயற்பாடுகளை முன்னெடுத்தோம். ஆனால் இறுதியாக, எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, தனது பெயரை அதில் பயன்படுத்திக்கொண்டார்” என அவர் குற்றஞ்சுமத்தினார்.