ஆந்திர  காவல்துறையினர் முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையிடம் ஒப்படைப்பு!

338 0
ஆந்திர மாநிலம் திருப்பதி தொடரூந்து நிலையத்தில்  முகிலனை அம்மாநில காவல்துறையினர் அழைத்துச் சென்ற காணொளி  வெளியானதை தொடர்ந்து தமிழக சிபிசிஐடி உடனடியாக ஆந்திர காவல்துறையை அணுகி முகிலனை தங்களிடம் ஒப்படைக்குமாறு வேண்டினர். அதன்படி காட்பாடி தொடரூந்து காவல் நிலையத்திற்கு முகிலன் கொண்டு வரப்பட்டார். பின்னர் சி.பி.சி.ஐ.டி. காவல் துறையினர் காட்பாடி சென்றனர். அங்கிருந்த ஆந்திர  காவல்துறையினர் முகிலனை தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையிடம் பத்திரமாக ஒப்படைத்தனர்.

அதன் பின் முகிலனை வஜ்ரவேல் தலைமையிலான தமிழக சி.பி.சி.ஐ.டி காவல்துறையினர்  பத்திரமாக சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.தகவல் அறிந்த தமிழ் உணர்வாளர்கள் முகிலனை விடுவிக்கக்கோரி  அங்கு கூடி  எழுப்பியதால் அங்கு பரபரப்பு நிலவியது.

அத்தோடு மருத்துவ பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படுவதாகவும் பின்பு வேலூர் மாவட்ட நீதி மன்றத்துக்கு அழைத்து செல்லப்படுவத்க தெரிகிறது.

அதேவேளை தமிழக காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டபோது ஊடகவியலாளர்கள் சந்திப்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டபோதும், முகிலன் எழுவர் விடுதலையை வலியுறுத்தி கத்தியதோடு, ஊடகவியலாளர்களைப் பார்த்து  தான் கடத்தப்பட்டதாகச் சத்தம் போட்டுக் கூறியுள்ளார்.