பிரான்சு பரிசில் தமிழீழத் தேசத்தின் தடைநீக்கிகள் நாள் 2019 நினைவேந்தல், பரிஸ் மக்ஸ்டொமிப் பகுதியில் நேற்று 05.07.2019 வெள்ளிக்கிழமை பிற்பகல் 15.00 மணிக்கு உணர்வெழுச்சியுடன் இடம்பெற்றது.தமிழர் ஒருங்கிணைப்புக்குழு பிரான்சு, மாவீரர் பணிமனையின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பொதுச்சுடரை பிரான்சு மாவீரர் பணிமனைப் பொறுப்பாளர் நித்தி முகுந்தினி அவர்கள் ஏற்றிவைக்க ஈகைச்சுடரினை 20.09.1995 அன்று காங்கேசன்துறையில் வீரச்சாவைத்தழுவிய கடற்கரும்புலி லெப்.கேணல் கீர்த்தி அவர்களின் சகோதரி ஏற்றிவைத்து மலர்வணக்கம் செலுத்தினார்.
அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும் தீபம் ஏற்றி மலர்வணக்கம் செலுத்தினர்.இதனையடுத்து பரிஸ் 13,14 தமிழ்ச்சோலை மாணவிகளின் கரும்புலிகள்நினைவு sஎழுச்சி நடனம் மற்றும் தமிழர் கலைபண்பாட்டுக் கழகக் கலைஞர்களின் கரும்புலி நினைவு சுமந்த பாடல்கள் என்பனவும் இடம்பெற்றன.
நிகழ்வில் நினைவுரையினை, பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு நிர்வாகப் பொறுப்பாளர் திரு.பாலசுந்தரம் அவர்கள் ஆற்றியிருந்தார்.
அவர்தனது உரையில், தடைநீக்கிகளான கரும்புலிகளின் ஈகம்பற்றிய சிறப்புக்களை எடுத்துவிளக்கியிருந்தார்.
திரு.குருபரன் அவர்கள் நிகழ்வைத் தொகுத்து வழங்கியிருந்தார்.நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன், தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு நிறைவுகண்டது.
(பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு -ஊடகப்பிரிவு)