ஜனாதிபதித் தேர்தலை ஒத்திவைப்பதற்கு முடியுமா என உயர் நீதிமன்றத்தை வினவ அரசாங்க தரப்பினர் தயாராகி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் அகுரஸ்ஸ தொகுதி இளைஞர் யுவதிகள் அமைப்புடன் இன்று (06) நடைபெற்ற கலந்துரையாடலில் கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இன்னும் ஜனாதிபதித் தேர்தலுக்கு 136 நாட்களே உள்ளன. வேட்பாளர் பதிவுக்கு 106 நாட்களே உள்ளன. இந்த நிலையிலேயே 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதியின் பதவிக் காலத்தை இன்னும் நீடிக்க முடியுமா? என விளக்கம் கோரி உயர் நீதிமன்றத்துக்கு செல்ல அரசாங்கத்தின் ஜனாதிபதித் தரப்பு நடவடிக்கை எடுத்து வருகின்றது.
அவ்வாறு சென்று தவறியாவது மாற்றமான தீர்வொன்றை பெற்றுக் கொண்டால், அன்றைய தினத்திலிருந்து அரசாங்கம் மரணிக்க ஆரம்பித்து விடும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.