இஸ்லாத்திலுள்ள முடியுமான சட்டத்தையே இந்த நாட்டில் நடைமுறைப்படுத்த முடியும்- சம்பிக்க

327 0

தத்தமது சமயங்களில் என்ன குறிப்பிடப்பட்டிருந்தாலும் அவை தான் வாழும் நாட்டுக்கும் சமூகத்துக்கும் பொருத்தமானதா என பார்த்தே நடைமுறைப்படுத்த வேண்டுமென ஜாதிக ஹெல உறுமய கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான பாட்டளி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.

பொதுக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

இஸ்லாத்தில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான நபிமார்கள் வந்துள்ளதாக கூறப்படுகின்றது. அவ்வளவு பேரும் கூறிய விடயங்களை இந்நாட்டிலும் முழு உலகத்திலும் செயற்படுத்த முடியாது.

அதேபோன்று, கிறிஸ்தவ பைபிலில் பல்லுக்குப் பல், கைக்குக் கை என பழிக்குப் பழி சட்டம் கூறப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதலுக்கு இந்தச் சட்டத்தின்படி அவர்கள் செயற்பட்டிருந்தால், நாட்டில் நிலைமை எவ்வாறாக அமைந்திருக்கும்.

அத்துடன், பௌத்த மதத்தில் தேரர்களுக்கு இசை நிகழ்ச்சிகளைக் கேட்கக் கூடாது, நாடகம் பார்க்கக் கூடாது எனக் கூறப்பட்டுள்ளது. இருந்தும், இதிலிருந்து தவிர்ந்து வாழ முடியாதுள்ளது. நாம் அதனைச் செய்கின்றோம்.

இந்த நாட்டில் ஒரு சட்டமே காணப்பட வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு திருமணச் சட்டங்கள் இருக்க முடியாது.  இந்த நாட்லுள்ள கல்வி முறைமை நாட்டுக்குத் தேவையான பிரஜையை உருவாக்கும் கல்வியாக இருத்தல் வேண்டும். அரபி மத்ரஸா முறைமை இந்த நாட்டுக்குரிய பிரஜையை அல்ல அரபு நாட்டுக்குரிய பிரஜையையே உருவாக்குகின்றது எனவும் அவர் மேலும் கூறினார்.