தந்தை, தாய், தான் கட்டியெழுப்பிய ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி இன்றில்லை-சந்திரிகா

291 0

ஶ்ரீலங்கா சுதந்திர கட்சியின் ஆரம்பக் கொள்கைகள் தற்போது மாற்றமடைந்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.

யக்கல வீரகுல பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு கூறினார்.

தனது தந்தை, தாய் மற்றும் தன்னால் கட்டியெழுப்பப்பட்ட ஶ்ரீலங்கா சுதந்திர கட்சி தற்போது இல்லை என்றும் கட்சியில் இடம்பெறுகின்ற எந்த நடவடிக்கைகள் தொடர்பிலும் தனக்கு தெரியாதிருப்பதாகவும் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க கூறியுள்ளார்.