காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்துவிவசாய சங்கத்தினர் கூட்டமைப்பினர் இன்று இரண்டாவது நாளாக இன்று தமிழகம் முழுவதும் ரயில் மறியல் போரட்டம் நடைபெறுகிறது. தஞ்சை,திருவாரூர்,நாகை,கடலூல் மாவட்டங்களில் விவசாயிகள் நேற்று முதல் தொடர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் சென்னையில் இன்று பல்வேறு இடங்களில் ரயில் மறியல் போராட்டம் இரண்டாவது நாளாக நடைபெற்றது. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் அக்கட்சியினர் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், சென்ட்ரல் – மங்களூரு விரைவு ரயிலை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சீமான் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்தனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சீமான் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதன் மூலமே தமிழகம்,கர்நாடகா,புதுச்சேரி,கேரளா மாநிலங்கள் உரிய தண்ணீரை பகிர்ந்து கொள்ளமுடியும் என்றார். உச்ச நீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க உத்தரவிட்டும் கடைசிவரை பொறுமையாக இருந்த பிரதமர் மோடி திடீரென பின்வாங்கி தமிழகத்துக்கு துரோகம் செய்துவிட்டதாக கூறினார்.
திருப்பூரில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முன்வராத மத்திய அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் சார்பில் ரயில் மறியலில் போராட்டம் நடைபெற்றது இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மத்திய அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்து ரயில் மறியலில் ஈடுபட முயன்றனர்.அவர்களை தடுத்து நிறுத்தி காவல்துறையினர் கைது செய்தனர்.