அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளாராம் கோத்தா

337 0

நான் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளேன், மேலும் நான் நாட்டிற்கு வந்த பின்னர் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக எனது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பதாக உறுதியளிக்கிறேன் என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

சிங்கப்பூரில் சிகிச்சை பெற்று வரும் கோத்தபாய ராஜபக்ஷவை பார்வையிடச் சென்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இவ்வாறு தெரிவித்துள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணத்துங்க தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தான் மக்களுக்கு அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்றத் தயாராக உள்ளதாகவும், மேலும் தான் நாட்டிற்கு வந்த பின்னர் இந்த உறுதிமொழிகளை நிறைவேற்றுவதற்காக எனது நேரத்தையும் சக்தியையும் அர்ப்பணிப்பதாக உறுதியளிக்கிறேன்  என கோத்தபாய  தெரிவித்தார் என பிரசன்ன ரணத்துங்க குறிப்பிட்டுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களான தேனுகா விதானகமகே, பிரியங்கரா ஜெயரத்னா மற்றும் இந்திக அனுருத்த ஆகியோருடன்  முன்னாள் அமைச்சர் கெஹெலியா ரம்புக்வெல்லாவும் கோத்தபாயவை சந்திக்கக் கடந்த  செவ்வாய்க்கிழமை சிங்கப்பூர் சென்றிருந்தனர்.

இந்நிலையில் குறித்த சந்திப்பின் பின்னரே மேற்குறித்த தகவலைப் பிரசன்ன ரனத்துங்க வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்கதக்து.