மீண்டும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட வீட்டுத்திட்ட கோரிக்கை

362 0

eco_2மக்களுக்கு பொருத்தமான புதிய வீட்டுத்திட்ட பொறிமுறையில் முல்லை மாவட்டத்து மக்களின் கோரிக்கை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என மின்னஞ்சல் மூலம் தனக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர், வைத்தியக் கலாநிதி.சி.சிவமோகன் தெரிவித்தார்.

அண்மையில் முல்லை மாவட்டத்தில் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் நடைபெற்ற போது புதுக்குடியிருப்பு, முல்லை நகரம், ஒட்டு சுட்டான் ஆகிய பிரதேச மக்கள் பல நூற்றுக் கணக்கில் கூடி தமது வீட்டுத்திட்டம் மழை காலம் தொடங்குவதற்கு முன் தரப்பட வேண்டும் என கோரினர்.

அத்தோடு அவர்கள் தமக்கு நேர்ந்த அநீதிகள், தற்காலிக கொட்டில்களில் தாம் படும் வேதனைகள் என தமது உள்ள குமுறல்களை இணைத்  தலைவர்களுக்கு  வெளிப்படுத்தினர். பல நூற்றுக்கணக்கான மக்களால் ஒப்பமிடப்பட்ட மகஜர்கள் வன்னி மாவட்ட  நாடாளுமன்ற உறுப்பினர் சிபாரிசுடன் அரசுக்கும் எதிர்க்கட்சி தலைவர்.இரா.சம்பந்தன் அவர்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. அதன் தொடர் நிகழ்வாகவே கடந்த 7ஆம் திகதி இடம்பெற்ற பொருளாதார முகாமைத்துவ கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுத்திட்ட கோரிக்கை சம்பந்தப்பட்ட விடயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இக்கூட்டம் பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.