இடமாற்றத்தைக் கண்டித்து மட்டக்களப்பு கல்வி வலய ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

5669 22

downloadமட்டக்களப்பு கல்வி வலயத்திற்கு முன்பாக ஆசிரியர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.இவர்கள் இன்று புதன்கிழமை காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். முறையற்ற இடமாற்றத்தைக் கண்டித்தும் தங்களின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரியும் இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

‘மட்டக்களப்பு கல்வி வலயத்திலிருந்து 38 ஆசிரியர்களுக்கு கஷ்டப் பிரதேசங்களுக்கு கடந்த மே மாதம் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது. கஷ்டப் பிரதேசங்களில் கற்பித்தல் செயற்பாடுகளை 05 வருடகாலம் பூர்த்தி செய்த ஆசிரியர்களுக்கும் மீண்டும் கஷ்டபிரதேசங்களுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a comment