கந்தளாய் – சேருநுவர பகுதியில் கருப்புபாலத்திற்கு அருகில் இருந்த 1892 தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையினர் தெரிவித்துள்ளனர்.
கந்தளாய் பொலிஸ் விஷேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலை அடுத்து குறித்த தோட்டாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இன்போது 5.56 x 45 வகையான தோட்டாக்கள் 1539, 7.62 x 39 வகையான தோட்டாக்கள் 123, 7.62 x 54 வகையான தோட்டாக்கள் 72, 12.7 x 108 வகையான தோட்டாக்கள் 5 மற்றும் வெவ்வேறு பழுதடைந்த தோட்டாக்கள் 153 உம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது கண்டுபிடிக்கப்பட்ட தோட்டாக்கள் சேருநுவர பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் சேருநுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.