சிங்கப்பூரில் மருத்துவ சிகிச்சைகள் முடிந்து அங்கு ஓய்வு எடுத்துவரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்த பாய ராஜபக் ஷவை, சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பால கிருஷ்ணன் சந்தித்துப் பேசியுள்ளார்.

சிகிச்சை தொடர்பாகவும் உடல் நலம் குறித்தும் விபரங்களை கேட்டறிந்த அவர்  இதர பொது விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின்போது கலந்துரையாடியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை கொழும்பில் இருந்து எதிர்க்கட்சி எம்.பிக்களான தேனுக்க விதானகமகே, பிரியங்கர ஜயரத்ன, பிரசன்ன ரணவீர, இந்திக்க அனுருத்த, பிரசன்ன ரணதுங்க, கெஹெலிய ரம்புகவெல்ல ஆகியோர் சிங்கப்பூர் சென்று நேற்று  கோத்தபாய ராஜபக்ஷவை சந்தித்துள்ளனர்.

நாட்டுக்கான தனது அரசியல் பயணத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாக இதன்போது கோத்தபாய ராஜபக்ஷ அவர்களிடம் தெரிவித்துள்ளார்.  மருத்துவ சிகிச்சையின் பின்னர் ஓய்வெடுத்துவரும் கோத்தபாய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடுதிரும்புவார் என்று தெரிவிக்கப்படுகின்றது.