யாழ் நகரப்பகுதியில் விபத்து-இருவர் காயம்

348 0

accயாழ் தட்டாதெருச் சந்தியில்  முச்சக்கர வண்டியும் மோட்டார் சைக்கிள்  ஒன்றும் விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற இவ் விபத்தில் சாரதிகள் இருவரும் காயங்களுக்குள்ளான நிலையில் சிகிச்சைக்காக  யாழ் போதனா வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஒழுங்கை ஒன்றிலிருந்து யாழ் தடடாதெருச் சந்திக்கு ஏறும்பொழுது யாழிலிருந்து கே .கே .எஸ் வீதி நோக்கி சென்ற மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டியுடன் மோதியதிலே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை யாழ் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

accc