பெருந்தோட்டங்களின் செயற்பாடுகளை கண்காணிக்க விசேட மேற்பார்வை செயலனி அறிமுகம் படுத்தபட்டுள்ளது இதற்கான அமைச்சரவை அங்கிகாரமும் கிடைத்துள்ளது. தற்போது நாளாந்தம் பெருந்தோட்ட தொழிலாளர்களும் பெருந்தோட்ட நிறுவனங்களும்  பல்வேறு பிரச்சனைகளுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

காரணம் உரிய மேற்பார்வை இன்மையும் முறையான ஆலோசனைகளும் அபிப்பிராயங்களும் வழங்காமை. இந்நிலையில் இதற்கான உரிய தீர்வுகளை காண்பதற்கும் பெருந்தோட்டத்துறையை அபிவிருத்தி செய்வதற்கும் இந்த செயற்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது என பெருந்தோட்ட கைத்தொழில் இராஜாங்க  அமைச்சரும் இலங்கை தேசிய தோட்ட தொழிலாளர் சங்கத்தின் பொது செயலாளருமான வடிவேல் சுரேஷ் கூறுகின்றார்.

பதுளை மாவட்டம் ஹாலிஎல ஊவஹைலண்ட்ஸ் எல்லவெல்ல தோட்ட  தொழிலாளர்களை சந்தித்து அவர்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார். இதன் போது தொழிலாளர்களின் கொழுந்துகளை நிருக்கும் நிலுவை தராசையும் பரிசோதித்துக் கொண்டார்.

தொடர்ந்து இந்த விடயம்  தொடர்பில் கருத்து  தெரிவித்த இராஜாங்க அமைச்சர்

பெருந்தோட்டங்களின் நடவடிக்கைகளை மேற்பார்வை செய்வதற்கு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சில் பெருந்தோட்ட மேற்பார்வை பிரிவு காணப்படுகின்றது. இதுவே அரச சார்பில் பெருந்தோட்டத்துறை சார்ந்த அனைத்து துறைகளையும் கண்கானித்து மேற்பார்வை செய்து தேவையானவற்றை வழங்கி  வழிநடத்தி ஆலோசனை அபிப்ராயங்களையும் வழங்கி வருவதுடன் தொழிலாளர்களுக்கும் தொழில் வழங்குனர்களுக்கும் இடையிலான இணைப்பை முறையாக பேனி பாதுகாத்தும் வருகின்றது.

தற்போது பெருந்தோட்டங்களை 22 தனியார் கம்பனிகளுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டாலும் தோட்டங்கள் அனைத்தும் அரசாங்கத்திற்கு சொந்தமானதே இந் நிலையில் பெருந்தோட்டங்களின் செயற்பாடுகளை கண்கானிக்க வேண்டிய பொறுப்பு பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சுக்கு உள்ளது. இந்த மேற்பார்வை செயலனிக்கு பெருந்தோட்டத்துறை சார்ந்தவர்கள் அதிகாரிகளாக இணைத்தக் கொள்ளப்படவுள்ளனர்.

இவர்கள் பெருந்தோட்ட பயிர்செய்கையில் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சரியாக நடைபெறுகின்றதா தொழிலாளர்கள் சார்பில் ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்ட விடயங்கள் தோட்டங்களில் கடைபிடிக்கப்படுகின்றதா. உற்பத்திகளில் சர்வதேச தரம் பேனப்படுகின்றதா தோட்டங்கள் துப்பரவு செய்து தொழிலாளர்கள் தொழில்புரிய பாதுகாப்பு பேனப்படுகின்றதா  போன்ற பல்வேறு விடயங்கள் உட்பட பல விடயங்கள் தொடர்பில் கவனம்  செலுத்துவர்.

இந்த மேற்பார்வை செயலனியினர். தோட்டங்களுக்கு வருகின்றோம் என்று கூறிவிட்டு வருவது இல்லை. திடீர் என்றே வருவார். தொழிலாளர்கள் தொழில் வழங்குனர்கள் முன் கூட்டியே ஏதும் முறைபாடுகள் இருந்தால் முறையிடலாம். இந்த செயலனி சுயமாக எந்தவிதமான தலையீடுகள் இன்றி இயங்கும். என்று கூறினார்.

 

குறிப்பாக பெருந்தோட்டங்களில் தொழிலாளர் சம்பள ஒப்பந்தத்தில் கைசாத்திடப்பட்ட விடயங்கள் நடைமுறைபடுத்தவது இல்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. குறிப்பாக வேலை நேரம்¸ எடுக்க வேண்டிய கொழுந்தின் நிரை அளவு¸ சம்பள நிர்ணயம்¸ வேலை நாட்கள்¸ தராசின் குழருபடிகள்¸ மேலதிக கிலோ¸ விடுமுறை¸ நிரந்தர நியமனம்¸ கைகாசு¸ மற்றும் நலன்புரி விடயங்கள் ஆகின முறையாக நடைபெருவதில்லை என்று. இனி இந்த செயலனி முறையாக செயற்படுமானால் இவ்வாறான பிரச்சனைகள் தோன்றாமல் இருக்கும் என்பது குறிப்பிடதக்கது