04.07.2000 அன்று நாகர்கோவில் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய படை நகர்விற்கெதிரான முறியடிப்புச் சமரில் வீரச்சாவைத் தழுவிய 38 மாவீரர்களினதும்,தென்மராட்சியில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா மற்றும் லெப். டயஸ் ஆகியோரினது 19 ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
ஆட்டிலறி மற்றும் மோட்டார் எறிகணைச் சூட்டாதரவோடு டாங்கிகளின் துணையுடன் நாகர்கோவில் விடுதலைப் புலிகளின் முன்னரங்க பாதுகாப்பு நிலைகளை ஊடறுத்து முன்னகர்ந்த சிறிலங்கா படையினரின் பாரிய படை நகர்விற்கு எதிராக விடுதலைப் புலிகளின் படையணிகள் தீரமுடன் களமாடி படைநகர்வை முற்றாக முறியடித்தனர்.
முற்று முழுதாக பெண் போராளிகளே இந்த முன்னகர்வு முயற்சியை முறியடித்து சிறிலங்கா படைத்தரப்பிற்கு பாரிய அழிவுகளை ஏற்படுத்தினர்.
அவர்களின் விபரம் வருமாறு
மேஜர் அன்பு (வைரமுத்து புஸ்பவதி – ஆவரங்கால், யாழ்ப்பாணம்)
மேஜர் பிரியங்கா (வைத்தியலிங்கம் சசிகலா – புன்னாலைகட்டுவான், யாழ்ப்பாணம்)
மேஜர் செல்வி (பரராஜசிங்கம் கலைச்செல்வி – அச்செழு, யாழ்ப்பாணம்)
கப்டன் இலக்கியா (செல்வரத்தினம் பாமினி – வேலணை, யாழ்ப்பாணம்)
கப்டன் கலைக்குயில் (அருள்) (பாலசிங்கம் பாலசாந்தினி – ஓமந்தை, வவுனியா)
லெப்டினன்ட் யாழரசி (சூசைதாசன் கெல்சியா – சிலாவத்தை, மன்னார்)
லெப்டினன்ட் சிவநங்கை (திலகராஜா விமோஜினி – ஸ்கந்தபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் வெண்ணிலா (நாகமூர்த்தி சுகந்தினி – உதயநகர், கிளிநொச்சி)
லெப்டினன்ட் சுசீலா (தனுஸ்கோடி கலாரஜனி – கற்சிலைமடு, முல்லைத்தீவு)
லெப்டினன்ட் நாமகள் (செல்வமதி) (கந்தையா சஜீந்தினி – துணுக்காய், முல்லைத்தீவு)
லெப்டினன்ட் தணிகை (ஆறுமுகம் பத்மாவதி – வரணி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கீதவாணி (இலட்சுமணன் தர்சினி – காரைநகர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் கலைப்பிரியா (கறுப்பையா தனலட்சுமி – ஒமந்தை, வவுனியா)
லெப்டினன்ட் புரட்சிக்கங்கை (இரத்தினம் ஜெயவதனி – புத்தூர், யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் சமரிசை (ஞானபண்டிதர் றஞ்சிதமலர் – உருத்திரபுரம், கிளிநொச்சி)
லெப்டினன்ட் முகிலா (கந்தசாமி பராசக்தி – நவாலி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் வாசுகி (தவராஜசிங்கம் பிறேமினி – திருநெல்வேலி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் ஈழப்பிரியா (கிருஸ்ணானந்தம் ரேணுகாதேவி – மயிலிட்டி, யாழ்ப்பாணம்)
லெப்டினன்ட் பிறைநிலா (மரியதாஸ் கெங்காநாயகம் – மாதகல், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் நளாயினி (அமுதச்சுடர்) (தருமகுலசிங்கம் கௌசல்யா – ஜெயந்திநகர், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நிலவாணி (மாடசாமி கஜனி – சாவகச்சேரி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் செந்தாழினி (பாக்கியநாதன் சற்குணதேவி – துணுக்காய், முல்லைத்தீவு)
2ம் லெப்டினன்ட் தமிழ்மலர் (திருநாவுகரசு ரசீபா – வேரவில், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் கல்கி (தமிழிசை) (நடேஸ் தட்சாயினி – அராலி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் மதிமகள் (நாகராசா அனுசா – வரணி, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் இன்சுடர் (சுப்பிரமணியம் புஸ்பமலர் – பாரதிபுரம், கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் நாமதி (கந்தசாமி கலைமதி – சண்டிலிப்பாய், யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் குமுதா (சபாபதிப்பிள்ளை விஜயலட்சுமி – வட்டக்கச்சி, கிளிநொச்சி)
2ம் லெப்டினன்ட் தமிழ்பாடிணி (வில்வமங்களம் விமலராகினி – காங்கேசன்துறை, யாழ்ப்பாணம்)
2ம் லெப்டினன்ட் அகநிலா (இராமச்சந்திரன் சசிகலா – புலோலி, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அலைமகள் (அகமகள்) (செல்லையா செல்வகுமாரி – சுண்ணாகம், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை அகர்மொழி (முருகேசு யோகம்மா – காரைநகர், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை பாரதி (தேவதாஸ் சாந்தமேரி – உடும்பிராய், யாழ்ப்பாணம்)
வீரவேங்கை கலைமதி (கலைவதனி) (முருகேசு தயாளினி – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
வீரவேங்கை பிறை (செல்வி) (இராசநாயகம் பகீரதி – நெடுங்கேணி, வவுனியா)
வீரவேங்கை யாழ்மொழி (காந்தி) (செபமாலை மெறில்டா – புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு)
வீரவேங்கை மாதுரி (புரட்சிகலை) (இராசரரத்தினம் பத்மராணி – வேலணை, யாழ்ப்பாணம்)
வீரவேங்கை யாழரசி (ஜோர்ச்மரியதாஸ் தர்சினி – பளை, யாழ்ப்பாணம்)
இம் மாவீரர்களினதும் இதே நாளில்
சாவகச்சேரிப் பகுதி மீது சிறிலங்கா படையினர் நடாத்திய எறிகணைத் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிய லெப்.கேணல் நிஸ்மியா (சிற்றம்பலம் ரஞ்சிதமலர் – கொக்குத்தொடுவாய், முல்லைத்தீவு) மற்றும் கச்சாய் பகுதியில் சிறிலங்கா படையினருடன் இடம்பெற்ற மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்டினன்ட் டயஸ்(இதயன்) – (ஜீவானந்தம் திவாகர் – கிரான், மட்டக்களப்பு) ஆகிய மாவீரர்களினதும் நினைவு நாள் இன்றாகும்.
தாயக விடுதலை வேண்டி இதே நாளில் தங்கள் உயிரை அர்பணித்து மண்ணை, மக்களைக் காத்த வீரமறவர்களுக்கு எமது வீரவணக்கங்கள்…!
“புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்”