முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் மனைவி மொஹமட் சகாப்தீன் ஆயிசாவுக்கு சொந்தமான தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பில் விசாரணைகள் பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
குறித்த வங்கிக் கணக்குக்கு சந்தேகமான முறையில் 55 மில்லியன் ரூபாவுக்கும் அதிக பணம் வைப்பிலப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது சம்பந்தமாக அண்மையில் கொழும்பு பிரதான நீதவானிடம் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியின் நிதி புலனாய்வு பிரவினரால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைவாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி மோசடி விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.
தனியார் நிதி நிறுவனம் ஒ்னறினால் வழங்கப்பட்டுள்ள காசோலை மூலம் பல சந்தர்ப்பங்களில் சந்தேகமான முறையில் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளமை தெரிய வந்துள்ளதாக பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவால் நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.