கோத்தபாய ராஜபக்ஷ பாதுகாப்பு செயலாளராக இருந்தபோது அமெரிக்காவுடன் பல ஒப்பந்தங்கள் செய்துள்ளார். அது பற்றி யாரும் பேசவில்லை. ஆனால் நாட்டுக்கு பாதகமில்லாத, வெறும் பேச்சுவார்த்தை மட்டத்தில் மட்டுமே காணப்படும் சோபா ஒப்பந்தம் குறித்து மக்கள் மத்தியில் வீண் அச்சங்கள் தோற்றுவிக்கப்படுவதாக பொதுநிர்வாகம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சோபா ஒப்பந்தம் இன்னும் கைசாத்திடப்படவில்லை. ஆனால் எதிர்க்கட்சியினர் அது குறித்து பொய் பிரசாரங்களையே முன்னெடுக்கின்றனர். அவர்கள் கூறுவதைக் கேட்டு மக்கள் அச்சமடையச் தேவையில்லை. அத்தோடு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன வெகுவிரைவில் இந்த ஒப்பந்தம் குறித்து தெளிவுபடுத்துவார் என்றும் அவர் குறிப்பிட்டார்.