திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில்

324 0

thissa-attanayaka-remandedஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் காலத்தின் போது, போலி ஆவணங்களை வெளியிட்டமை, உள்ளிட்ட மூன்று குற்றச்சாட்டுக்கள் தொடர்பான வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது அவரை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த 09ஆம் திகதி சட்டமா அதிபரால் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.