மேல் மாகாணத்தில் வாகன நெரிசலை கட்டுப்படுத்த விசேட திட்டம்

315 0

மேல்மாகாணத்தின் தென் பகுதியில் வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக புதிய போக்குவரத்து நிர்வாக பிரிவை ஸ்தாபிக்க உள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

மேல் மாகாணத்தின் தென் பகுதியில் ஸ்தாபிக்கப்படவுள்ள  போக்குவரத்து நிர்வாகப்பிரிவுக்கு பொறுப்பாக பொலிஸ்  அத்தியட்சகர் ஒருவர் அதற்கு பணிப்பாளராக   நியமிக்கப்படவுள்ளார்.

இதேவேளை துணைப்பொலிஸ் அத்தியட்சகர்கள் மூவர் நியமிக்கப்படவுள்ளன. இதன் கீழ் இந் நிர்வாக பிரிவின் கீழ் சுமார் 200 இற்கும் அதிகமான பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் பணியில் ஈடுப்படுத்தப்படுவார்கள்.

வாகன நெரிசலை கட்டப்படுத்தி வாகன போக்குவரத்தை ஒழுங்கு  செய்வதற்காக 50 பொலிஸ் மோட்டார் சைக்கிள்கள், பொலிஸார் பயன்படுத்தும் 8 ஒலிபெருக்கிக்கார்களும் சேவையில் ஈடுப்படுத்தப்படவுள்ளன.