சஹ்ரான் குழுவினரால் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டு பொலிஸாரால் மீட்கப்பட்ட டொல்பின் ரக வேன் இன்று (03) கல்முனை நீதிமன்ற நீதிவானால் நிபந்தனையுடன் பிணையில் விடுவிக்கப்பட்டது.
சாய்ந்தமருது தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்த சஹ்ரான் குழுவினர் வாடகைக்குப் பெற்றுப் பயன்படுத்திய வேன் மூலம் மீரிகம பகுதிக்குச் சென்று ஆடை விற்பனை நிலையம் ஒன்றில் சிங்களப் பெண்கள் அணியும் 10 வெள்ளை நிற ஆடை உள்ளிட்ட பொருட்களைக் கொள்வனவு செய்திருந்தனர்.
இந்நிலையில் வாடகை மூலம் பெறப்பட்ட குறித்த வேன் அண்மையில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.
இந்நிலையில் குறித்த வேன் தொடர்பான வழக்கு இன்று நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் கடும் நிபந்தனைகளுடன் ரூபா 50 இலட்சம் பிணையில் குறித்த வேன் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதையடுது்து பிணையில் விடுவிக்கப்பட்ட குறித்த வேனின் உரிமையாளர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அதன் ஆவணங்களில் குறித்த நபரின் மனைவியின் பெயரை பதிந்துள்ளமையினால் பிணையில் விடுவிக்கப்பட்ட வேனை குறித்த பெண்ணே நீதிமன்றலிருந்து எடுத்து சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த வழக்கு தொடர்பான விசாரணைகள் அடுத்த மாதம் 21 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது