சீனாவின் நிதியில் அந்நாட்டை சுற்றிப்பார்க்க செல்லும் ஹக்கீம் தலைமையிலான தூதுக்குழு!

243 0

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் இலங்கை நாடாளுமன்ற தூதுக்குழு ஜூலை 14 ஆம் திகதி சீனாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இந்த தூதுக்குழுவில் அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சர் வீ.இராதாகிருஷ்ணன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான நிமல் சிறிபால டி சில்வா, காமினி லொக்குகே, கெஹலிய ரம்புக்வெல, மஹிந்தானந்த அழுத்தகமே, லக்ஷமன் யப்பா அபேவர்தன மற்றும் தமிழரசு கட்சியின் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் அடங்குகின்றனர்.

சீனா மற்றும் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையிலான உறவை வலுப்படுத்தும் நோக்கில் இவர்களின் குறித்த விஜயம் அமைந்துள்ளது. சீன அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ் சீனாவுக்கு விஜயம் செய்யும் இறுதி நாடாளுமன்ற குழு இதுவாகும்.

புதிய அரசாங்கம் நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி அன்று இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனை அடுத்து 2015 ஆம் ஆண்டு ஒக்டோபர் 26 முதல் 10 தூதுக்குழுக்கள் சீனாவுக்கு சென்றுள்ளன.

குறித்த பிரதிநிதிகள் பீஜிங், குன்மிங், குவாங்சோ, ஷென்சென், செங்டு, ஷாங்காய், வுஹான், சுஜோ, நாஞ்சிங், சுஜோ மற்றும் திபெத் ஆகிய இடங்களை பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.