இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டம்

336 0

downloadஉள்ளுர் இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி யாழ் கச்சேரி முன்பாக நெடுந்தீவு மீனவர்கள் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்றை நிகழ்த்தியுள்ளனர்.

கடற் பரப்பில் உள்ளுர் இழுவைமடித்  தொழிலைத் தடுத்து பட்டினிச்சாவை எதிர் கொண்டிருக்கும் நெடுந்தீவு வாழ் மீனவர்களின் வாழ்வை முன்னேற்றக் கோரியும் நெடுந்தீவு கடற்தொழில் சங்கங்களின் சமாசம் குறித்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.

இதில் கலந்து கொண்ட நெடுந்தீவு கடற்தொழில் சங்கங்களின் சமாசத் தலைவர் கருத்து தெரிவிக்கையில், இது வரை காலமும் தென்னிலங்கை மீனவர்களாலும், இந்திய மீனவர்களாலும், வட பகுதி மீனவர்கள் பாதிக்கப்பட்டனர். ஆனால் இன்று நாம் உள்ளுர் மீனவர்களால் பாதிக்கப்பட்டு வருகின்றோம். குறிப்பாக குருநகர் பகுதி மீனவர்கள் தற்போது பெரிதும் இழுவைப்படகு மீன் பிடியையே மேற்கொண்டு வருகின்றனர்.

இழுவை படகு மீன் பிடியில் ஈடுபவதும் அல்லாமல் எமது கடற்  பகுதிக்குள்  ஊடுருவி எமது வழங்களை அழித்து வருகின்றனர். இதனால் நாம் பட்டினிச் சாவை எதிர்நோக்கி வருகின்றோம்.

எமது பகுதி கடல் வளம் பாதிக்கப்படவதுடன் கடலை நம்பி வாழும் எமது குடும்பங்கள் பட்டினிச்சாவை எதிர்கொண்டு வருகின்றனர்.

எனவே உடனடியாக  இழுவை படகு மீன் பிடியை நிறுத்தக்கோரி போராட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளோம்.

எமது நியாயமான கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டு கடற் படையினர், பொலிஸார், மற்றும் அரச அதிபர் போன்றோர் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.