சுற்றுலா தொழிற்துறையை மேம்படுத்துவதற்காக நுவரெலியாவில் கேபில் கார் திட்ட முறையை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை உயர்மட்டத்தில் கவரக்கூடிய வகையில் நுவரெலியா பிரதேசம் நாட்டின் உன்னதமான நிலையில் அமைந்துள்ளது.
அத்தோடு இயற்கை அழகைக் கொண்டிருப்பதினால் இந்த பிரதேசம் சுற்றுலா துறையினரை மேலும் கவரக்கூடிய வகையிலான நடவடிக்கையாக நானுஓயாவிலிருந்து சிங்கில் ட்ரீ மலை மற்றும் கிரகரி குளம் வரையில் கேபல் கார் திட்டமொன்றை ஆரம்பிப்பதற்காக வரையறுக்கப்பட்ட அவுட்டோர் இன்ஜினியரிங் லங்கா தனியார் நிறுவனம் மற்றும் அதன் வெளிநாட்டு பங்குதாரர்களான டொபெல்லெம் கேபில் கார் நிறுவனத்தினால் திட்ட ஆலோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கமைவாக 50 மில்லியன் டொலர் முதலீட்டின் கீழ் நானுஓயா ரயில் நிலையம் நுவரெலியா குதிரை பந்தத் திடல் மற்றும் சிங்கல் ட்ரீ மலை உச்சியை கடந்த வகையில் 21 கோபுரங்களின் மேல் கட்டியெழுப்புவதற்கு ஆலோசிக்கப்பட்டுள்ள இந்த திட்டத்தின் மூலம் 10 நிமிடங்களில் செல்லக்கூடிய 86 சிறிய கூடங்களை கொண்டதுடன் இதில் முதல் கட்டத்தின் கீழ் 46 கூடங்களை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கமைவாக இந்த திட்டம் முதலீட்டு சபையின் திட்டமாக நடைமுறைப்படுத்துவதற்காக புரிந்துணர்வு உடன்படிக்கை எட்டுவதற்காக பெருந்தோட்டத்துறை அமைச்சு சமர்ப்பித்த ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.