பாடசாலை அச்சுப் புத்தகங்களை ஆராய நடவடிக்கை!

324 0

நல்லிணக்கத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய மற்றும் சமூகத்துக்குள் பிரிவினைகளை ஏற்படுத்தும் விடயங்கள் இருக்கின்றதா என்பது தொடர்பாக தேடிப்பார்க்க, கல்வி அமைச்சினால் நியமிக்கப்பட்ட விசேட குழு பிரதான ஐந்து மதங்களின் அச்சுப்புத்தங்களை ஆராய நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி வெளியீட்டு ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அதன் பிரகாரம் முதலாம் தரத்தில் இருந்து 11ஆம் தரம்வரை பெளத்த, கத்தோலிக்க, கிறிஸ்தவ, இந்து மற்றும் இஸ்லாம் சமயம் உள்ளடங்கும் அச்சுப்புத்தங்கள் மற்றும் உயர்தர ஆசிரியர் கை நூல் என்பன ஆராயப்பட இருக்கின்றன.

ஆரம்பம் முதல் அச்சுப்புத்தங்களை தீவிரமாக ஆராயும் நடவடிக்கை மிகவும் பொறுப்புவாய்ந்த செயல் என்பதால் இந்நடவடிக்கைக்கு கல்வி அமைச்சில் இருக்கும் கல்வியலாளர்கள் சிலர் இணைக்கப்பட்டிருக்கின்றனர்.

குறித்த குழுவின் கண்காணிப்பு நடவடிக்கையின் இறுதியில் கல்வியலாளர்களின் ஆலோசனைகளுடன் அறிக்கையொன்றை தயாரித்து கல்வி அமைச்சின் செயலாளருக்கு கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.