ரயிலுடன் மோதுண்ட தாயும் மகளும் படுகாயம்

395 0

கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று காலை சென்ற உடரட்ட மெனிக்கே ரயிலுடன்  தாயும்,  மகளும் மோதுண்டதில் பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக நாவலபிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை, பலத்த காயங்களுக்குள்ளான 27வயதுடைய தாயும் 07வயதுடைய சிறுமியும் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டு மேலதிக சிகிச்சைகாக கண்டி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கபட்டுள்ளதாக நாவலபிட்டி வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

இந்த விபத்து நாவலபிட்டி நகரப் பகுதியில் இடம்பெற்றதாகவும் ரயில் வரும் பொழுது தாயும் மகளும் ரயில் தண்டவாளத்தில் நின்று கொண்டிருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் காயங்களுக்குள்ளான தாயும் மகளும் கெட்டபுலா கடுங்சேன பகுதியை சேர்நதவர்கள் என தெரியவந்துள்ளது.

இதையடுத்து  குறித்த விபத்து தொடர்பில் மேலதிக விசாரனைகளை நாவலப்பிட்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.