மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள்-இன்று பாதுகாப்பாம்!

551 0

மடுத்தேவலாய பெருநாளிற்கு சிறிலங்கா இனப்டுகொலை இராணுவத்தின் முப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டிருப்பதாக சிங்கள ஊடகங்கள் செய்திகள் வெளியிடுகின்றன.உண்மையில் மடு அன்னையின் மடியில் இரத்த ஆறு ஓட வைத்தவர்கள் இந்த சிறிலங்கா படைகள் என்பதே நிதர்சனம்.மார்ச் மாதம் 22 ஆம் திகதி 1999 ஆம் ஆண்டு ரணகோச என்ற ஆக்கிரமிப்பு இராணுவ நடவடிக்கையின் மூலம் மன்னார் மடுப் பகுதியை கைப்பற்றும் ஆக்கிரமிப்பு போரை தொடங்கிய இராணுவத்தினர்.

இதன் போது நவம்பர் 20ஆம் திகதி. 1999ஆம் ஆண்டு இரவு 9 மணியின் பின்னர் பண்டிவிரிச்சான் இராணுவ தளத்திலிருந்து செல்கள் ஏவப்பட்டு மடுத்தேவாலயமே இரத்தஆறாய் ஓடியது.இதில் சிறுவர்கள் 13 பேர் உட்பட மொத்தம் 44 பொதுமக்கள் சிறிலங்கா இனப்படுகொலை இராணுவத்தால் படுகொலைசெய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனப்படுகொலையாளி லெப்டினன் ஜெனரல் மகேஸ் சேனாநாயக்க முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையுத்ததில் திட்டமிடல் பகுதியில் உயர் அதிகாரியாகவும் அதன்பின் யாழில் இயங்கிவந்த வதைமுகாம்களுக்கு பொறுப்பாக இருந்தவர் என்பதும் மேலதிக தகவல்.