கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொலை

433 0

அம்பலாங்கொட பகுதியில் கொபேதுடுவ சந்தியில் உள்ள வயல்வெளி ஒன்றில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (02) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பலத்த காயங்களுக்கு உள்ளான நபர் பலபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

அம்பலாங்கொட, திலகபுர பகுதியை சேர்ந்த 35 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சிற்றுண்டிச்சாலை ஒன்றின் உரிமையாளர் எனவும் இன்று காலை இறைச்சி வாங்குவதற்காக சந்தைக்கு சென்ற போது இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு குழுக்களுக்கு இடையில் பல காலமாக இருந்த பகையின் காரணமாகவே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் பட்டபொல மற்றும் அம்பலாங்கொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.