மரண தண்டனைக்கு எதிரான மனுவை விசாரணை செய்ய 5 நீதிபதிகள் கொண்ட குழு

315 0

மரண தண்டனையை நடைமுறைப்படுத்துவதை தடுத்து நிறுத்துமாறு தெரிவித்து ஊடகவியலாளர் மலிந்த செனவிரத்னவினால் தாக்கல் செய்யப்பட்ட ரீட் மனுவை விசாரணை செய்ய மேன்முறையீட்டு நீதிமன்றம் 5 நீதிபதிகள் கொண்ட குழுவை நியமித்துள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட இந்த குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தீபாளி விஜேசுந்தர, ஜனக் த சில்வா, அச்சல வெங்களப்புலி, அர்ஜுன ஒபேசேகர ஆகியவர்கள் குறித்த குழுவின் உறுப்பினர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

இன்று காலை 11.30 மணியளவில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது.