கோத்­தபாய ராஜ­பக்­ ஷவுக்கு எதி­ராக ஜனா­தி­பதித் தேர்­தலில் போட்­டி­யிடத்  தயா­ராக இருப்­ப­தாக ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் குமார் வெல்­கம தெரி­வித்­துள்ளார்.

தொலைக்­காட்சி விவாதம் ஒன்றில் உரை­யாற்­றிய போது அவர் இவ்­வாறு கூறினார்.பதுளை மாவட்ட பொது­ஜன பெர­முன கட்சி தலை­மை­யி­லி­ருந்து நான் நீக்­கப்­பட்­டி­ருப்­ப­தாக என்று கூறப்­பட்­டாலும், நான் ஒரு­போதும் அந்தக்  கட்­சியின் உறுப்­பி­ன­ராக இல்­லா­ததால் அத்­த­கைய நட­வ­டிக்கை தேவை­யற்­றது. தாம் ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் பெய­ர­ள­வி­லான பத­வி­களை விட்டு விலகி, ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சி­யுடன் இணைந்து செயற்­ப­ட­வுள்ளேன். ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மீதான அதி­ருப்­தி­யினால், அப்­போது நான்  பொது­ஜன பெர­மு­ன­வுக்கு ஆத­ர­வ­ளித்தேன். ஜனா­தி­பதித் தேர்­தலில் தமது வேட்­பாளர் யார் என்­பதை  பொது­ஜன பெர­முன எனக்கு அறி­வித்­துள்­ளது.

 

ஜனா­தி­பதி வேட்­பா­ள­ராக, கோத்­தபாய ராஜ­பக் ஷ இல்­லா­விடின், மீண்டும் அந்தக்  கட்­சியை ஆத­ரிக்கத் தயா­ராக இருக்­கிறேன். ஆகஸ்ட் 11 ஆம் திகதி பெய­ரி­ட­வுள்ள வேட்­பா­ளரை நான் எதிர்க்­கிறேன்.

நான் ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியில் இருந்­தாலும், ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்­கை­களை எதிர்ப்­ப­தற்­கான உரிமை உள்­ளது.

தேசிய உடை அணி­ப­வரே அடுத்த ஜனா­தி­ப­தி­யாக வர வேண் டும். ஜனா­தி­பதி வேட்­பா­ள­ரா­வ­தற்கு நானும் கூட தகு­தி­யா­னவன் தான். அதற்கு ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் ஒருமித்த கருத்து தேவைப்படுகிறது. ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டால், மக்களின் ஆதரவைப் பெற முடியும் என்று நம்புகிறேன்” என வும் அவர் தெரிவித்தார்.