அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன் னணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பும் முழு ஆதரவையும் வழங்கவேண்டும். வாக்கெடுப்பில் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக கூட்டமைப்பு வாக்களிக்கும் என நாங்கள் எதிர்பார்க்கின்றோம் என்று கூட்டு எதிரணியின் முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமான தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார்.
இந்த அரசாங்கத்தை நம்பி தமிழ் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை. வடக்கு, கிழக்குப் பிரதேசங்கள் அபிவிருத்தி செய்யப்படவுமில்லை. கூட்டமைப்பு தொடர்ந்து அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவதில் அர்த்தமில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி முன்வைத்துள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு கூட்டு எதிரணி முழுமையான ஆதரவைவழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை தொடர்பில் விபகரிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
அவர் இந்த விடயம் குறித்து மேலும் குறிப்பிடுகையில்;
அரசாங்கத்திற்கு எதிராக ஜே.வி.பி.யினரால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு நாங்கள் முழுமையான ஆதரவை வழங்குவோம்.
இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின்போது நாங்கள் ஆதரவாக வாக்களிப்பதற்கு தீர்மானித்திருக்கின்றோம். இதேவேளை இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவாக தமிழ் தேசியக்கூட்டமைப்பும் வாக்களிக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.
கூட்டமைப்பு வாக்கெடுப்பின்போது நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஆதரித்து வாக்களிக்கும் என்பது எமது நம்பிக்கையாகும். தமிழ் தேசியக்கூட்டமைப்பு தமது பிரச்சினைகளுக்கு தீர்வை எதிர்பார்த்தே தற்போதைய அரசா்ஙகத்திற்கு ஆதரவு வழங்குகிறது. ஆனால் அவர்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை.
வடக்கு, கிழக்குப் பகுதிகள் அபிவிருத்தி செய்யப்படவுமில்லை. தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகள் கிடைக்கப் பெறவுமில்லை. எனவே அரசாங்கத்திற்கு கூட்டமைப்பு தொடர்ந்து ஆதரவு வழங்குவதில் அர்த்தமில்லை. அதனால் . அதனால் நம்பிக்கையில்லாப் பிரேரணை வாக்கெடுப்பின்போது கூட்டமைப்பு ஒரு தீர்க்கமான முடிவை எடுக்கும் என எதிர்பார்க்கின்றோம். எங்களுடன் இணைந்து கூட்டமைப்பும் நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவு வழங்கும் என்பதே எமது எதிர்பார்ப்பாகும் என்றார்.