கடந்த அரசாங்கம் மக்களின் வரப்பிரசாதங்களை மொத்தமாக சுருட்டிக் கொண்டது- சஜித்

348 0

உங்களுடைய வாக்குகளின் மூலம் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படும் ஒருவர் மக்களின் கனவுகளை நினைவாக்காது தமது கனவை நினைவாக்க ஆரம்பித்து விடுவதாக வீடமைப்பு, நிர்மாணத்துறை மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

2025 ஆம் ஆண்டில் யாவருக்கும் வீடு பெற்றுக் கொடுக்கும் நோக்கில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் நாடளாவிய ரீதியில் நடை முறைப்படுத்தப்பட்டு வரும் குறித்த திட்டத்திற்கு அமைவாக தேசிய வீடமைப்பு வேல​ைத்திட்டத்தின் கீழ் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட மடுக்கரை கிராமத்தில் அமைக்கப்பட்ட 211 ஆவது மாதிரிக் கிராமமான ´குறிஞ்சி நகர்´ கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடுகள் வைபவ ரீதியாக இன்று (01) காலை திறந்து வைக்கப்பட்டது.

மன்னார் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர் ஜெ.நோயல் ஜெயச்சந்திரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் சஜித் பிரேமதாச அவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்,நாங்கள் நல்ல வீட்டில் வாழ வேண்டும், எங்கள் பிள்ளைகள் கல்வியில் முன்னேற்றம் அடைய வேண்டும், நாங்கள் முன்னுக்கு வர வேண்டும் என்ற பல்வேறு கனவுகளுடன் நீங்கள் அனைவரும் இங்கே வந்துள்ளீர்கள். தேர்தல் காலங்களில் உங்கள் கையினை மையில் நலைத்து ஒருவரை உங்களுக்கான தலைவராக தெரிவு செய்கின்றீர்கள்.

ஏன் உருவாக்குகின்றீர்கள்? இப்படியான கனவுகளை நினைவாக்குவதற்கு, உங்கள் சார்பாக செயல் படுவதற்கு ஒரு தலைவன் வேண்டும் என்பதற்காக தெரிவு செய்கின்றீர்கள்.

ஆனால் அவ்வாறு தெரிவு செய்யப்படுகின்ற தலைவர்கள் என்ன செய்கின்றார்கள் என்றால் நாங்கள் அதைச் செய்கின்றோம், இதைச் செய்கின்றோம் என பொய் வாக்குறுதி வழங்குகின்றனர். உங்களுடைய வாக்குகளின் மூலம் ஒருவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்படுகின்றார்.

ஆனால் தெரிவு செய்யப்பட்ட ஒருவர் மக்களின் கனவுகளை நினைவாக்காது தமது கனவை நினைவாக்க ஆரம்பித்து விடுகின்றார்.

தனது மனைவி, உறவினர், சொந்தக்காரர்களின் கனவுகளை நினைவாக்குகின்றார். இப்படியான கனவுகளை நினைவாக்கியவர்கள் கடந்த அரசாங்கத்திலே காணப்பட்டார்கள்.

மக்களுக்கு வர வேண்டிய வரப்பிரசாதங்களை மொத்தமாக சுறுட்டிக்கொண்டு பங்கிட்டார்கள். அதன் மூலமாக மக்களின் அபிவிருத்தி,சுகாதாரம்,பொருளாதாரம் அனைத்தும் வழங்கப்பட்டது.

இப்படியாக எங்களினால் உங்களுக்காக தெரிவு செய்யப்படுகின்ற ஒவ்வொறு தலைமைகளும் தங்களுடைய என்னம் போல் தமது கனவுகளை என்னுகின்றனர். அப்படி இருக்கின்ற போது இந்த நாடு எப்படி அபிவிருத்தி அடையும்? எங்கள் மத்தியில் எப்படி சமாதானம் உருவாகும், இந்த நாடு எப்படி சரியான முறையில் வலுவூட்டப்படும்?

சிந்தித்துப் பாருங்கள், உங்களுக்காக உங்கள் கையினை மையில் நலைத்து ஒருவரை தெரிவு செய்கின்ற போது ஒரு தடவை அல்ல பல தடவை சிந்தித்து பாருங்கள் தெரிவு செய்யப்படுகின்றவர் உங்களுக்காக எதனை செய்தார் என்று. எனவே கடந்த காலங்களில் ஏற்பட்ட அந்த சம்பவங்கள் உண்மையிலேயே எங்களுக்கு ஓர் பாரிய இழப்பாகவே காணப்படுகின்றது.

குறிப்பாக இலங்கையில் உள்ள 220 இலட்சம் மக்களின் வாழ்க்கையில் காணப்படுகின்ற பொருளாதார பிரச்சினையாக இருக்கலாம், கல்வியாக இருக்கலாம், வீடமைப்புத்திட்டமாக இருக்கலாம்.

உண்மையிலே காலம் சென்ற முன்னாள் ஜனாதிபதி ரனசிங்க பிரேமதாசவுடைய வழியில் நான் உங்களுக்கு உங்கள் அனைவருடைய கனவுகளையும் எதிர் காலத்திலே ஏற்படுத்தித் தருவேன் என்று தெரிவிக்கின்றேன் என அவர் மேலும் தெரிவித்தார்.