ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்த அரசாங்கம் முயற்சிக்கிறது – மஹிந்த

302 0

ஜனாதிபதித் தேர்தலை தாமதப்படுத்தும் நோக்கத்துடன் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன குற்றம் சாட்டியுள்ளது.

கொழும்பில் இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த மஹிந்த யாப்பா அபேவர்தன, தற்போது நாட்டில் ஆட்சி மாற்றத்தை கொண்டுவரும் தேர்தலுக்கே அவசியம் உள்ளது என சுட்டிக்காட்டினார்.

அடுத்த சில வாரங்களுக்குள் மாகாண சபை தேர்தலை நடத்த அரசாங்கம் முயற்சிக்கிறது. இந்த நடவடிக்கைக்கு கூட்டு எதிர்க்கட்சி முற்றிலும் எதிர்ப்பை தெரிவிக்கும் என அவர் கூறினார்.

மேலும் எந்தவொரு சூழ்நிலையிலும் ஜனாதிபதி தேர்தலை தள்ளிவைக்க கூட்டு எதிர்க்கட்சி அனுமதிக்காது என்றும் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.