லண்டனில் பாலியல் பலாத்கார குற்றச்சாட்டில் 23 வயது இளைஞர் கைது செய்யப்பட்டு உள்ளார்.
பாலியல் பலாத்கார சம்பவம் அந்நாட்டின் பாராளுமன்றத்திற்குள் நடந்து உள்ளது என்று லண்டன் பொலீசார் கூறியுள்ளனர்.
பாலியல் பலாத்கார சம்பவமானது வெள்ளிக்கிழமை காலையில் நடைபெற்று உள்ளது,
மாலையில் சந்தேகத்திற்கு இடமான வாலிபரை பொலீசார் கைது செய்து உள்ளனர்.
வாலிபரின் பெயர் வெளியிடப்படவில்லை, ஆனால் அவர் எம்.பி. கிடையாது என்று பொலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்கிடையே கைது செய்யப்பட்ட வாலிபருக்கு ஜனவரி வரையில் ஜாமீன் வழங்கப்பட்டு, அவர் விடுவிக்கப்பட்டார். இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று பொலீஸ் தெரிவித்து உள்ளது.