பெரும் எதிர்பார்ப்புடன் கோத்தபாய ராஜபக்ஷவினால் எழுதி வெளியிடப்பட்ட ‘கோத்தாவின் போர்’ என்ற நூல் பிரபலமடையவில்லையென முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ கவலை வெளியிட்டுள்ளார்.
ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
‘உலகிலே போர்க்கால நிகழ்வுகள் தொடர்பாக எழுதப்பட்ட பல நூல்கள் பிரபலமடைந்துள்ளன. அவற்றைப்போன்றே இதுவும் பிரபலமடையும் என்ற எதிர்பார்ப்புடன் எழுதப்பட்டதே இந்நூல்.
துரதிஷ்டவசமாக அது பிரபலமடையாமல் போனது வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.
இந்நூலை கோத்தபாய ராஜபக்ஷ சந்திர பிரேம என்ற ஊடகவியலாளர் மூலம் வெளியிட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.