எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி சார்ப்பில் வேட்பாளர் ஒருவரை முன்னிருத்துவதே கட்சியின் நிலைப்பாடு என ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் சந்திரசேன தெரிவித்துள்ளார்.
அநுராதபுர பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தற்போது நாட்டின் எதிர்பார்ப்பு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி ஒருவர் மற்றும் பிரதமர் ஒருவர் எனவும் அதனால் தாமும் அதே நிலைப்பாட்டில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கோட்டாபய ராஜபக்ஷவை தான் மக்கள் வேண்டுவதாகவும் அவர் வேலை செய்துகாட்டியவர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.