சிறீலங்காவுக்கு 210 மில்லியன் யூரோ நிதியுதவி வழங்குகின்றது ஐரோப்பிய ஒன்றியம்!

316 0

federica-mogherini-ranilசிறீலங்காவின் அபிவிருத்திக்கு 210 மில்லியன் யூரோவை வழங்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் உறுதி வழங்கியுள்ளது.

பிரசெல்சுக்குப் பயணம் செய்ய சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளிவிவகார மற்றும் பாதுகாப்புக் கொள்கைகளுக்கான உயர் பிரதிநிதியும், ஐரோப்பிய ஆணையத்தின் உதவித் தலைவருமான பிடெரிக்கா மொகேரினியை சந்தித்துப் பேச்சு நடத்திய போதே ஐரோப்பிய ஒன்றியம் சார்பில் இந்த உறுதிமொழி வழங்கப்பட்டது.

2020ஆம் ஆண்டுவரையான காலப்பகுதிக்கான அபிவிருத்தி நிதி உதவியாகவே 210 மில்லியன் யூரோ (34 பில்லியன் ரூபா) வழங்கப்படவுள்ளது.

2007-2013 ஆண்டு சிறீலங்காவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தினால் வழங்கப்பட்ட நிதியைவிட இது இரண்டு மடங்கு அதிகமாகும்.

நிலையான அபிவிருத்தி, இடம்பெயர்ந்த மக்களின் மீளக் குடியமர்வு, அத்துடன் வறுமையால் பாதிக்கப்பட்ட மக்களின் அபிவிருத்திக்கு இந்நிதி பயன்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.