பிரேசில், இந்தோனேசிய அதிபர்களுடன் மோடி சந்திப்பு

441 0

ஜி20 உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, மாநாட்டின் இடையே பிரேசில் மற்றும் இந்தோனேசிய அதிபர்களை சந்தித்து பேசினார்.

ஜப்பானின் ஒசாகா நகரில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாடு நடைபெறுகிறது. மாநாட்டில் பங்கேற்றுள்ள தலைவர்கள் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் அமர்வுகளில் தங்கள் கருத்துக்களை பதிவு செய்கின்றனர். இதுதவிர மாநாட்டின் இடையே தலைவர்கள் தனித்தனியாகவும் சந்தித்து பேசுகின்றனர்.
அவ்வகையில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரேசில் அதிபர் ஜேர் போல்சோனாரா மற்றும் இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ ஆகியோரை தனித்தனியே சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்துவது தொடர்பாக பேசினார்.

மேலும், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் சிறப்பு ஒத்துழைப்பு, காலநிலை மாற்றத்தின் பின்னணியில் விவசாயம் மற்றும் உயிர் எரிபொருள்கள், பாதுகாப்பு உள்ளிட்ட அம்சங்கள் தொடர்பாகவும் பேசப்பட்டது.

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபே, அமெரிக்க அதிபர் டிரம்ப், ரஷிய அதிபர் புதின், சீன தலைவர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை மோடி சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.