மரண தண்டனையை அமுல் செய்து, எந்த ஒரு நபரையும் தூக்கிட்டு கொல்வதை தடுக்கும் வகையில் உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி முன்னாள் பத்திரிகை ஆசிரியர் ஒருவர் மேன் முறையீட்டு நீதிமன்றில் ரீட் மனுவொன்றினை தககல் செய்துள்ளார்.
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த மனு இன்றைய தினமே பிற்பகல் வேளை அவசர மனுவாக ஆராயப்பட்ட நிலையில், மீண்டும் அம்மனுவை எதிர்வரும் ஜூலை 2 ஆம் திகதி பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ள மேன் முறையீட்டு நீதிமன்றம் தீர்மானித்தது.
இந் நிலையில், எதிர்வரும் வாரத்தின் இறுதி வரை தனது பொறுப்பில் இருக்கும் எந்தவொரு கைதியையும் தூக்கிட்டு மரண தண்டனையை நிறைவேற்றுவதில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் ஜயசிறி விஜேநாத் தென்னகோன் மேன் முறையீட்டு நீதிமன்றில் உடன்பாடு தெரிவித்தார்.