பாராளுமன்றத்தில் இன்று ரயில்வே ஊழியர்களின் போராட்டம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேலை பிரேரணையில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

அவரசரகால சட்டம் பயங்கரவாத தாக்குதலைவிட பயங்கரமானதாகும்.அதனால் இச் சட்டத்தை பயங்கரவாதத்துக்கு மாத்திரம் பாவிக்கவேண்டும். மாறாக தொழிற்சங்களை அடக்க பாவிக்கக்கூடாது. தற்போது ரயில் ஊழியர்களின் போராட்டம் இடம்பெறுகின்றது. அவர்களின் கோரிக்கைக்கு நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொடுத்து பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டும்.

அத்துடன் போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கு மரண தண்டனையை நிறைவேற்ற ஜனாதிபதி இணக்கம் தெரிவித்திருக்கின்றார். மணர தண்டனை வழங்குவதற்கு நாங்கள் ஒருபோது இணக்கம் தெரிவிக்க மாட்டாடோம்.

1976க்கு பின்னர் இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்படவில்லை.இதுபோன்ற தண்டனைகள் ஷரிஆ சட்டத்தின் பிரகாரம் அரபு நாடுகளில் வழங்கப்படுகின்றன.ஆனால் அந்த நாடுகளில் குற்றங்கள் குறைந்ததாக இல்லை.

அதனால் மரண தண்டனையை நிறைவேற்றி ஜனாதிபதியும் ஷரிஆ சட்டத்தையே அமுல்படுத்த முயற்சிக்கின்றார்.

இவ்வாறான சட்டங்களை நிறைவேற்றும் உலகில் எந்த நாட்டிலும் குற்றங்கள் குறைந்ததில்லை. அதனால் மரண தண்டனை நிறைவேற்றுவதால் எமது நாட்டில் போதைப்பொருள் விற்பனை குறைவடையும் என்று ஒருபோதும் எதிர்பார்க்க முடியாது என அவர் தெரிவித்தார்.