அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் தேசியப் பிரச்சினைகளின் போது தாம் சுயாதீனமாகவே செயற்படப் போவதாக அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்தில் அங்கம் வகித்தாலும் தேசிய ரீதியாக மக்களைப் பாதிக்கும் பிரச்சினைகளின் போது எதிர்காலத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஓர் உறுப்பினராக சுயாதீனமான தீர்மானங்களையே எடுப்பேன்.
சில சந்தர்ப்பங்களில் அரசியல் ரீதியான தீர்மானங்களை எடுக்க நேரிடும்.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டமை அவ்வாறான ஓர் அரசியல் ரீதியான சரியான தீர்மானமாகும்.
மக்களுக்கு சேவையாற்றும் நோக்கில் எதிர்காலத்திலும் இவ்வாறான தீர்மானங்களை எடுக்க தான் பின்நிற்கப் போவதில்லை.
தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொள்வதற்கு தான் எடுத்த தீர்மானத்தை ஏற்றுக்கொண்ட தரப்பினைப் போன்றே ஏற்றுக்கொள்ளாத தரப்பு ஒன்றும் உண்டு.
அது மக்களின் ஜனநாயக ரீதியான உரிமையாகவே கருதுகின்றேன் என அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.