சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 பேர் கைது – நளின்

282 0

சஹ்­ரானின் போத­னை­களில்  கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­ட­வர்­க­ளாக இருந்­தாலும் கூட இவர்­களை விடு­தலை செய்ய முடி­யாது. அவ்­வாறு விடு­வ­தென்­றாலும் இவர்­களை புனர்­வாழ்­வுக்கு உட்­ப­டுத்­தியே விடு­தலை செய்ய முடியும் என பிரதி அமைச்சர் நளின் பண்­டார பாரா­ளு­மன்­றத்தில் தெரி­வித்தார்.

அவ­ச­ர­ கால சட்­டத்தை மேலும் ஒரு­ மாத காலத்­துக்கு நீட்­டிக்கும் விவா­தத்தில் கலந்­து­ கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைக் குறிப்­பிட்டார்.

அவர் மேலும் உரை­யாற்­று­கையில்,

ஏப்ரல் 21ஆம் திகதி இடம்­பெற்ற தாக்­கு­தலைத் தொடர்ந்தே மீண்டும் அவ­ச­ர ­கால  சட்­டத்தைக் கொண்­டு­வர வேண்­டி­யேற்­பட்­டது. இது தொடர்­பாக முப்­ப­டை­யி­னரும் பொலி­ஸாரும் முன்­னெ­டுக்கும் நட­வ­டிக்­கை­க­ளுக்கு அவ­ச­ர­கால சட்டம் முக்­கி­ய­மா­னது. அவ­ச­ர­கால சட்­டத்தில் பொலிஸார் மட்டுமல்ல முப்­ப­டை­களும் தமது பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க முடிந்­துள்­ளது. இது ஆரோக்­கி­ய­மான விட­ய­மாகும். ஏனெனில் நாட்டின் நிலை­மையில் பொலி­ஸாரால் மட்­டுமே நிலை­மை­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது.

ஆகவே அவ­ச­ர ­கால சட்­டத்தின் கீழ் இரா­ணுவம் மற்றும் ஏனைய பாது­காப்பு படை­க­ளுக்கும் அதி­காரம் வழங்­கப்­பட்டு அவர்­க­ளுக்கும் தேசிய பாது­காப்பு விட­யத்தில் பாரிய பொறுப்பைக் கொடுத்­தி­ருப்­பது நல்ல விடயம் என்றே கரு­து­கின்றோம்.   இந்தச் சம்­ப­வத்தைத் தொடர்ந்து இது­வ­ரையில்  2389 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். அவர்­களில்  236 பேர் விளக்க மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­துடன்  189 பேர் தடுப்புக் காவ­லிலும் வைக்­கப்­பட்­டுள்­ளனர்.  3 பேர் அவ­ச­ர­ கால சட்­டத்தின் கீழும் 186 பேர்  பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் கீழும் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

இவர்­களில் 263 பேருக்கு எதி­ராக வழக்குத் தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது. அத்­தோடு  94 பேர் தொடர்­பாக  சட்ட மா அதி­பரின் ஆலோ­சனை பெற்­றுக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன்  7 பேர் விடு­தலை செய்­யப்­பட்­டுள்­ளனர். அத்­துடன் கைதா­கி­ய­வர்­களில்  79 பேர் பிர­தான சந்­தேக நபர்­க­ளாவர்.  குற்றப் புல­னாய்வுப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும் பயங்­க­ர­வாத விசா­ரணைப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும்  கொழும்பு குற்­ற­வியல் விசா­ரணைப் பிரிவின் பொறுப்பில் 29 பேரும்  இருக்­கின்­றனர் எனத் தெரிவித்தார்.