இ.போ.சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்கள்

332 0

இலங்கை போக்குவரத்து சேவையில் 2000 நவீன அதிசொகுசு பஸ்களை சேவைகளை இணைத்து கொள்ளும் செயற்திட்டம் இன்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

இதன் போது சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 9 பஸ்களை பிரதமர் போக்குவரத்து கடமையில் ஈடுபடுத்தி சேவையை ஆரம்பித்து வைத்தார்.

நாரஹேன்பிட்டியவில் உள்ள ஷாலிகா மைத்தானத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

அதிசொகுசு பஸ் சேவைகனை இலங்கை போக்குவரத்து சேவையில் இணைத்துக் கொள்வதற்கான யோசனைக்கு ஏற்கனவே அமைச்சரவை அனுமதி வழங்கியிருந்தது. இதற்கிணங்க சொப்ட் லொஜிக் நிறுவனத்தினால் அதிசொகுசு பஸ்கள் டென்டர் அடிப்படையில் இலங்கை போக்குவரத்து சேவைக்கு வழங்கப்பட்டன. சீனாவிலிருந்து சொப்ட் லொஜிக் நிறுவனம் இறக்குமதி செய்த இந்த சொகுசு பஸ்கள் 17.1 மில்லியன்களுக்கு இலாபத்துடன் இலங்கை போக்குவரத்து சபையால் கொள்வனவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.