இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவிற்கு வந்த பின்னர்  மூன்று வருட காலம் இராணுவமுகாமில் தடுத்து வைக்கப்பட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டதாக  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில்  வழக்கு தாக்கல் செய்துள்ள பெண்மணியொருவர் தனது மனுவில் தெரிவித்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக அமெரிக்க நீதிமன்றில் இரு சிங்களவர்கள் உட்பட பத்து பேர் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கோத்தபாய ராஜபக்ச இலங்கையில் பாதுகாப்பு செயலாளராக பணியாற்றிய காலத்தில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டவர்களே    கலிபோர்னியா நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

குறிப்பிட்ட பெண்மணி தான் தடுத்துவைக்கப்பட்டிருந்த முகாமின் பொறுப்பதிகாரியான மேஜர் முனசிங்க என்பவர் தன்னை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் என குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் நான் வேறு சில தமிழ் பெண்களுடன் முகாமொன்றில் தடுத்துவைக்கப்பட்டிருந்தேன் அங்கு பாலியல் வன்முறைகள் இடம்பெற்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் பொலிஸ் தலைமையகத்திலும் இராணுவமுகாமொன்றிலும் இதேவன்முறைகளை அனுபவித்ததாக  அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள மனித உரிமை சட்டத்தரணி ஸ்கொட் கில்மோர் நான் எனது வாழ்நாளில் மிக மோசமான  சந்தித்த பாலியல் அடிமைத்தனம் இதுவென குறிப்பிட்டுள்ளார்.

எங்கள் கட்சிக்காரர்களிற்கு எதிராக கோத்தபாய ராஜபக்சவின் பாதுகாப்பு படையினர் புரிந்துள்ள பாலியல் வன்முறைகளும்,இதனை புரிந்தவர்கள் தண்டனையிலிருந்து விடுவிக்கப்பட்டமையும் பாலியல் வன்முறைகள் இலங்கையில் நிறுவனமயப்படுத்தப்பட்ட கொள்கையாக விளங்கின என்பதை புலப்படுத்துகின்றன என அவர் குறிப்பிட்டுள்ளார்.