கிழக்கின் கல்வித்துறையில்  உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை – ஹாபிஸ் நசீர் அஹமட்

351 0

hafees2கிழக்கின் கல்வித்துறையில்  உள்ள குறைபாடுகள் நிவர்த்தி செய்யப்படும் வரை தமது போராட்டத்தை கைவிடப் போவதில்லை என முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்தார்

தாம் முதலமைச்சராக பதவி வகிக்கும் காலப்பகுதிக்குள்  கிழக்கு மாகாணத்தின் அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களையும் நிரப்புவதற்காக முழு முயற்சிகளையும் முன்னெடுத்துள்ளதாகவும் அவர் கூறினார்

சிறுபான்மையினரான தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் எழுச்சியும் வளர்ச்சியும் கல்வித்துறையின் அபிவிருத்தியிலேயே தங்கியுள்ளதாக முதலமைச்சர் குறிப்பிட்டார்

கிழக்கு மாகாணம் கல்வி நிலையில் உன்னத இடத்தைப் பிடித்து ஏனைய மாகாணங்களுக்கு முன்னுதாரனமாக மாற வேண்டும் என்பதே தமது கனவாகும் எனவும் முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் கூறினார்

எனவே அதற்கு எதிராக எவ்வாறான தடைகள் வந்தாலும் அவற்றை தகர்த்து முன்னோக்கிச் செல்வதற்கான வல்லமையை எல்லாம் வல்ல இறைவன் தமக்கு தருவான் என தாம் நம்புவதாகவும் முதலமைச்சர் கூறினார்

கிழக்கு மாகாணத்தின் ஆசிரியர் வெற்றிடங்கள் குறித்த அனைத்து தரவுகளும் தம்மிடம் இருப்பதாகவும்  ஏனைய குறைபாடுகள்  தொடர்பான தரவுகளை திரட்டி வருவதாகவும் இவை அனைத்தையும் பெற்று  இவற்றை நிவர்த்தி செய்வதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளவுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்

கிழக்கு மாகாணத்தை கல்வியில் மேம்படுத்தவதற்கான இந்த பயணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் முழு ஒத்துழைப்பை வழங்குவார்கள் என்ற முழு நம்பிக்கை தம்மிடம் உள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்

கிழக்கின் கல்வியியற் கல்லூரி ஆசிரியர்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்கான போராட்டம்  கிழக்கின் கல்வி முன்னேற்றத்திற்கான போராட்டத்தில் ஒரு அங்கம் மாத்திரமே என முதலமைச்சர் கூறினார்