ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெறமுண கட்சிகளுக்கிடையிலான 6வது கட்ட கலந்துரையாடல் இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்று மாலை எதிர்க்கட்சி தலைவரின் அலுவலகத்தில் இடம்பெறவுள்ளது.
இன்று நடைபெறவுள்ள கலந்துரையாடல் தொடர்பில் சுதந்திர கட்சியின் முன்னாள் செயலாளர் ரோஹன லக்ஷ்மன் பியதாச கருத்து தெரிவித்துள்ளார்.
இரு தரப்பினருக்குமிடையில் கடந்த 17ம் திகதி நடைபெறவிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.