ஹுங்கம, கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 மீன்பிடி படகுகள் முற்றாக தீயில் எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று இரவு 10 மணிக்கும் 11 மணிக்கும் இடையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
தங்காலை நகர சபையின் தீயணைப்பு பிரிவினர், பொலிஸார் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
படகுகள் எரிந்துள்ளமையால் சுமார் 500 இலட்சம் ரூபா வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் பொலிஸாரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.