தீ மூட்டிய சம்பவம் – ஹிலரி மீது ட்ரம்ப் குற்றச்சாட்டு

332 0

27-1474958493-hillary-clinton45அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் ஹில்ஸ்பர்க் என்ற இடத்தில் உள்ள குடியரசு கட்சியின் அலுவலகம் ஹிலரி கிளிண்டனின் ஜனநாயக கட்சியினராலேயே தீ வைத்து எரியூட்டப்பட்டதாக டொனால்ட் ட்ரம்ப் குற்றம் சுமத்தியுள்ளார்.

தனது உத்தியோக பூர்வ டுவிட்டர் சமூகத்தளத்திலேயே அவர் இந்த குற்றச்சாட்டை வெளியிட்டுள்ளார்.

அண்மையில் குடியசு கட்சியின் அலுவலம் அடையாளம் தெரியாத சிலரால்; தாக்குதலுக்கு இலக்காகி எரியூட்டப்பட்டது.

எவ்வாறாயினும் குறித்த சம்பவத்தில் எவருக்கம் எந்த வித பாதிப்பும் ஏற்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையில் குடியரசு கட்சி அலுவலகம் மீதான தாக்குதலுக்கு அந்த கட்சி சார்பில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளதுடன், குற்றச்சாட்டுக்களையும் முன்வைத்துள்ளார்.

எவ்வாறாயினும் இந்ததாக்குதலுக்கு ஹிலரி கிளிண்டனும் கண்டனம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.