தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா இலக்கும் நிலுவை சம்பளத்தையும் பெற்றுக் கொடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
கூட்டு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைமையகமான சௌமியபவனில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பொது செயலாளர் ஆறுமுகம் தொண்டமான் இவ்வாறு கூறினார்.
தீபாவளி பண்டிகையை கருத்தில் கொண்டே 730 ரூபாவிற்கு இணக்கம் தெரிவித்தோம் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரசின் பொது செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ஆறுமுகம் தொண்டமான் தெரிவித்தார்.
தோட்ட தொழிலாளர்களுக்கு பாதுகாப்பாக வேலை செய்யக் கூடிய வகையிலான சரத்து கூட்டு ஒப்பந்தத்தில் உள்ளடக்கியுள்ளோம்.
எனவே, இம்முறை தோட்ட தொழிலாளர்களுக்கு சார்பான பல விடயங்கள் குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் உறுதியுடன் செயற்பட்டது.
குறிப்பிட்ட தொழிற்சங்கம் குழப்பியடிக்காவிடின் உரிய சம்பள இலக்கை அடைந்திருக்க முடியும் எனவும் அவர் குறிப்பிட்டார்.