குண்டு துளைக்காத வாகனங்களைத் தேடி குமார வெல்கமவின் காணியில் சோதனை

329 0

kumar-welgama-415x260குண்டு துளைக்காத இரண்டு வாகனங்களைத் தேடி நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கமவிற்கு சொந்தமான காணி ஒன்றை காவல்துறை சிறப்பு விசாரணை பிரிவினர் இன்று சோதனையிட்டுள்ளனர்.

காவல்துறை மா அதிபருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாடொன்றுக்கு அமைய நீதிமன்றத்தால் பெற்றுக்கொள்ளப்பட்ட உத்தரவின் படி, இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்துகமவில் அமைந்துள்ள சுமார் 400 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த தேடுதல் மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறை சிறப்பு விசாரணை பிரிவின் பேச்சாளர் ஒருவர் குறிப்பிட்டார்.

எவ்வாறாயினும் அங்கிருந்து குண்டு துளைக்காத வாகனங்கள் எவையும் மீட்கப்படவில்லை என்றும் பேச்சாளர் குறிப்பிட்டார்.